Posted by : kayalislam Saturday, 11 June 2011


யாமுஹிய்யிதீனின் நாமம்
யாம் புகழ்வோம் பாரிலே
ஏக நாயன் தூதர்தாஹா
ஏந்தலர் தம் பேரரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

ஏகத்துவத்தின் இனிய தென்றல்
இகத்திலெங்கும் வீசவே
தாகித்திருந்தும் சேவை செய்த
தங்கமே அப்துல் காதிரே !
தாகித்திருந்தும் சேவை செய்த
தங்கமே அப்துல் காதிரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

ஆத்ம பிணிகள் அகற்றியுள்ளில்
அறிய ஞானம் ஏற்றியே
அழகு இஸ்லாம் தீனைக் காத்த
அண்ணலே அப்துல் காதிரே !
அழகு இஸ்லாம் தீனைக் காத்த
அண்ணலே அப்துல் காதிரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

பாரில் ஒலிமார் தோளிலுங்கள்
பாதந்திகழும் வண்ணமே
தீனின் குதுபாய்ப் பேரிலங்கும்
சீலரே அப்துல் காதிரே !
தீனின் குதுபாய்ப் பேரிலங்கும்
சீலரே அப்துல் காதிரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

அன்னை ஆணைமீறிடாமல்
சொன்ன உண்மை வாக்கினால்
கண்ணைத் திறந்தீர் கள்வர் நெஞ்சின்
கவ்துயா அப்துல் காதிரே !
கண்ணைத் திறந்தீர் கள்வர் நெஞ்சின்
கவ்துயா அப்துல் காதிரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

காசெரிந்தே வாவி விரிந்தே
கம்ழும் பகுதாத்ராஜரே
பாசொல்லி புகழ்வோரை நாளும்
பாதுகாப்பீர் நாதரே !
                                                                                 (யாமுஹிய்யிதீனின் நாமம்)

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2015 Kayalislam.com | All Rights Reserved.