முஹிய்யித்தீன் ஆண்டகையை போற்றிடுவோம்
புகழ் மிகுந்த மாதத்திலே புகழோங்கும் குருநாதர்
முஹிய்யித்தீன் ஆண்டகையை போற்றிடுவோம்
தீன்தீன் முஹம்மதரின் திருப்பேரர் முஹிய்யித்தீன்
ஒலிப் புகழைப் பாடிடுவோம் வாருங்களேன்
மாதவராம் அபுஸாலிஹின் மைந்தராக வந்துதித்தீர்
மெய்ஞான தவசீலர் குருநாதா
மாமறையின் நெறிகளை நீர்மாந்தருக்கு ஏற்றி வைத்தீர்
மாநபியின் மணிமொழியை போற்றி வந்தீர்
இஸ்லாத்தின் உயர்பண்பை இவ்வுலகில் பரப்பிடவே
இன்பமாக அவதரித்தீர் ஜீலானியில்
அகிலத்தின் அருட்கொடையாய் அன்னை பாத்திமா மடியில்
அன்பாக தவழ்ந்தீர்கள் ஜெயசீலா
அருளாளன் தீன் ஒங்க அகிலத்தின் இருள் மாய்க்க
அயராமல் உழைத்தீர்கள் குருநாதா
அன்னை சொல்லை மீறாமல் உண்மைதனை உரைத்தீர்கள்
கள்வர் கண்ணை திறந்தீர்கள் அணு கூலா
பகுதாது நகர்தனிலே பண்போடு வாழ்ந்து வரும்
பாசகரே உமைக் காண துடிக்கின்றேனே
முத்தொளியே மஹ்பூபே முழுமதியே மஃஷூக்கே
உமைக்காண நான் வரவே அருள் புரிவீர்
துன்பங்கள் நீங்கிடவே இன்பங்கள் நிலைந்திடவே
மன்னி , மன்னி கேட்கிறோம் யாகுத்பே - இவ்
அடியாரின் வேண்டுதலை ஆதியிடம் இறைஞ்சிடுவீர்
அன்பாளரே அருள் புரிவீர் எம்மீதே